Thursday, April 30, 2009

படித்ததில் பிடித்தது

கந்தையானாலும் கசக்கிகட்டு ஆம் உண்மைதான்
ஆனால் காயும் வரை எதைக் கட்டுவது!!!!!!
இதை படிச்சுட்டு பெண்கள் முறைபாங்க! ஆண்கள் சிரிப்பாங்க!!

கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! - சாக்ரடீஸ்
தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! - சேம் கினிசன்
எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! - பேட்ரிக் முரே
உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் - சிக்மென்ட் பிராட்.
ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! - பிராங்களின்.
ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி
சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! - யாரோ
"காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட்
பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே "ஆண்" னிடம்!ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா "பெண்" னிடம்!!

கவிதைகள்

கண்ணே மௌன விரதம் இருப்பது என்றால் முதலில்உன் கண்களை மூடிக்கொள் ஏனென்றால் உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகமாக பேசுகின்றன.......

தாயின் வலி நமக்கும் தெரிவதால் தான்அழுகின்றோம் நாம் பிறக்கும் போது.....

சிறுகதை

முருகேசனுக்கு திடீரென்று எதிர்காலத்துக்குப் போகும் ஆசை வந்தது. எப்படிப் போவது என்றுதான் தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தான். அவர்களோ அது நடக்கவே நடக்காது என்றார்கள். சினிமாக்களில் பார்க்கும் டைம்மெஷின்கள் எல்லாம் கற்பனைதான். அவை நிஜத்தில் கிடையாது என்று சொன்னார்கள்.
அவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.
'தவம் செய்து கடவுளிடம் வரம் கேட்டால் என்ன?'
சரியான ஐடியா!
இரவு பகல் பார்க்காமல் கடுமையாக தவம் செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் "டொய்ங்க்..." என்று ஒரு சத்தம். அவன் முன் தோன்றினார் கடவுள். "(அதேதான்) பக்தா! உன் பக்திக்குமெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்"
புல்லரித்துப்போனது முருகேசனுக்கு.
"எனக்கு எதிர்காலத்துக்குப் போகும் சக்தியைக்கொடு ஆண்டவா".
யோசிக்கவே இல்லை கடவுள். "அப்படியே ஆகட்டும். கண்களை மூடிக்கொள். கண்களைத் திறக்கும் போது நீ எதிர்காலத்தில் 25 வருடங்கள் தாண்டியிருப்பாய்."
சொல்லிவிட்டு காணாமல் போனார் கடவுள்.
கண்களை மூடினான் முருகேசன். சில வினாடிகள் காத்திருந்தான். கண்களைத் திறந்து பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை. கடவுளையும் காணவில்லை. ஏமாற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான். எதிரில் டீக்கடையில் மக்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெஞ்சில் வழக்கம் போல பேப்பர் ஒன்று கிடந்தது. சரி! கடவுள் நம்மை ஏமாற்றி விட்டார் என்று நினைத்துக்கொண்டான். சரி, பேப்பர் படித்து விட்டுப்போகலாமே என்று பெஞ்சில் போய் உட்கார்ந்தான் அவன்.
பேப்பரை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றொரு தேசிய விருது...
காவிரிப் பிரச்னைக்காக மீண்டும் கூடுகிறது நடுவண் நீதிமன்றம்...
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பயணம்...
இலங்கையுடன் விடுதலைப்புலிகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அழைப்பு...
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்...
பிரதமர் சென்னை வருகை : வரலாறு காணாத பாதுகாப்பு...
முல்லைத் தீவு வீழ்ந்தது - விரைவில் புலிகள் பிடிபடுவார்கள் : இலங்கை அதிபர் பேட்டி...
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு...
ஆப்கன், ஈராக்கில் வீரர்களைக் குவித்தது அமெரிக்கா...
என்று செய்திகள் இருந்தன. வெறுத்துப்போனான் முருகேசன்.
என்னடா இந்தக் கடவுள், இப்படி எதிர்காலத்துக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி நன்றாக ஏமாற்றி விட்டாரே! எல்லாமே இப்படி வழக்கமான செய்திகளாகவே இருக்கிறதே என்று வருத்தமும் கோபமுமாய் பக்கத்தைத் திருப்பினான். முதல் பக்கம் பார்க்கலாம் என்று பேப்பரை மடித்தவனின் கண்ணில் தலையங்கம் பட்டது.
"தங்கம் விலை உச்சத்தைத்தொட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 500 ரூபாய் உயர்ந்து ரூ.19,255-ஐ தொட்டது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,52,000-ஐ தாண்டியது" என்று அச்சாகியிருந்தது.
ஆச்சரியத்துடன் தேதியைப் பார்த்தான் முருகேசன்.
'01 மே 2035' என்று இருந்தது!

Wednesday, April 29, 2009

துணுக்குகள்

கிரேக்கத் தத்துவ ஞானியான டயோஜனஸ், ஒரு வீதியின் வழியே நடந்து கொண்டி ருந்தார். வழியில், சிறுவன் ஒருவனை பலரும் சேர்ந்து அடித்துக் கொண்டிருப் பதைக் கண்டார். அவர்களை விலக்கி விட்டவர், சிறுவனை அடிப்பதற்கான
காரணத்தைக் கேட்டார். அவர்கள், "கேட்கச் சகிக்காத வார்த்தைகளால்... அசிங்கமாக பேசியதால் இவனை அடிக்கிறோம்!'' என்றனர்.
உடனே, "அதற்காக இந்தச் சிறுவனை அடிக்காதீர்கள். இவனின் தந்தை யார் என்பதை அறிந்து, அவனைப் பிடித்து அடியுங்கள். மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தராத தந்தையே தண்டனைக்கு உரியவன்'' என்றார் டயோஜனஸ்!
மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்!
இவர் ஒரு நாள் அரசவையில், "மன்னா, ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தார். அரசனும் இதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தான்.
அரசாங்க செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன. இந்த விஷயம், ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்கும் தெரிய வந்தது. அன்று இரவு, சாணக்கியரது வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். திட்டப்படி அன்று இரவு சாணக்கி யரது வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு, அரதல் பழசான - கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர். அருகில் அவரின் தாயாரும் அப்படியே! கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்!
கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார். எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், "ஐயா... நாங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம். இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும் நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே?'' என்று கேட்டான்.
அதற்கு சாணக்கியர், "அவை, ஏழை- எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள். அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார்.
இதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர். 'இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம்' என்று அவர் முன் சத்தியமும் செய்தனர்!
சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்... அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்!
சுதந்திரப் போராட்ட காலம்! புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வர இருந்தார் ஜவஹர்லால் நேரு. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரித்த சமஸ்தானம், 'நேருவின் கார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையக் கூடாது!' என்று தடை விதித்தது. ஆனாலும், குறிப்பிட்ட நாளில் புதுக்கோட்டை எல்லையை நெருங்கினார் நேரு. அவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
சமஸ்தான அதிகாரி ஒருவர் காரின் அருகில் வந்து, தடை உத்தரவுக்கான கடிதத்தை நேருவிடம் காட்டினார். அப்போது, நேருவுடன் தீரர் சத்தியமூர்த்தியும் இருந்தார். அவர் நேருவின் காதில் ஏதோ முணுமுணுத்தார்!
அடுத்த நிமிடம்... இருவரும் காரில் இருந்து இறங்கி, ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர். பதறிப்போன அதிகாரி ஓடி வந்து அவர்களை மறித்தார். உடனே சத்தியமூர்த்தி, "நேருவின் கார் சமஸ்தான எல்லைக்குள் வரக் கூடாது என்பதுதானே உங்கள் உத்தரவு? தடை காருக்குத்தானே தவிர, நேருவுக்கு அல்ல!'' என்றார். வேறு வழியின்றி அதிகாரிகள் பின்வாங்கினர்.
சத்தியமூர்த்தியின் சமயோஜிதத்தை பாராட்டிய நேரு, பிறகு புதுக்கோட்டை மக்களை சந்தித்து விட்டுத்தான் டெல்லி திரும்பினார்!
கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.
ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார்.
உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.

உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே.
ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!

அட்சய திருதியையும் அன்னதானமும்!

அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன், குபேரன் ஆனதும், சூரியதேவனின் அருளால் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான்!
'அட்சயம்' என்றால் அழியாதது; அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். இந்த நாளில் செய்யும் புண்ணிய காரியங்க ளுக்கான பலன்கள் மென்மேலும் பெருகுமாம். அதிலும்... இந்த நாளில் அன்னதானம் செய்வது வெகு சிறப்பு! அப்படியென்ன மகிமை அன்னதானத்துக்கு?
சத்தியபுரி எனும் ஊரில், சிவாலயத்தை நிர்வகித்து வந்த அடியவர் விஸ்வநாதர். இவர் பிறந்ததுமே... 'இவருக்கு குழந்தை பிறந்ததும் துறவறம் மேற்கொள்வார்' என்றனர் ஜோதிடர்கள். மணமான பிறகு மனைவி- மகனுடன், அடியவர்களுக்கு அன்னதானம் அளித்து வந்தார் விஸ்வநாதர். ஒரு நாள், சிவனார் தன்னை அழைப்பதாகக் கனவு கண்டவர், துறவறம் பூண்டார்; மனைவி மற்றும் மகன் குணசீலனிடம் விடைபெற்று, காசிக்குச் சென்றார். பிறகு கணவர் விட்டுச் சென்ற அன்னதானப் பணியை மனைவி தொடர்ந்தாள். ஒரு நாள் மகன் குணசீலன், "தினமும் அன்னதானம் செய்கிறாயே... ஏன்? இதனால் எதிர்காலத்தில், ஏழை ஆகி விடுவோமே!" என்றான். அவனிடம், "காரணம் தெரியாது. அன்னதானத்தில் உன் தந்தைக்கு அதீத விருப்பம் உண்டு" என்றாள்.
இதையடுத்து, தவம் செய்து அன்னதான பலனை அறிவது என முடிவு செய்து, அன்னையின் அனுமதியுடன் வனத்துக்குப் புறப்பட்டான் குணசீலன்.
வழியில்... பசியால் வருந்திய வயோதிகர் ஒருவருக்குத் தன்னிடம் இருந்த உணவை அளித்து விட்டு, பயணத்தைத் தொடர்ந்தவன் அந்திவேளையில் காட்டில் வேடன் ஒருவனைக் கண்டான். "இரவில் காட்டில் தனியே இருக்கக் கூடாது" என்று குணசீலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான் வேடன். மிருகங்களால் ஆபத்து நேரக் கூடாது என்பதற்காகப் பெரிய மரம் ஒன்றின் கிளைகளில் பரண் அமைத்து, மனைவியுடன் வசித்து வந்தான் வேடன்.
அவனின் மனைவி பொல்லாதவள். குணசீலன் பசியுடன் இருந்தபோது, அவனுக்கு உணவு தர மறுத்தாள். என்றாலும், தன் பங்கில் பாதியை குணசீலனுக்குத் தந்தான் வேடன். உண்டு முடித்ததும், மனைவிக்கும் தனக்கும் இடையில் குணசீலனைப் படுக்க வைத்தான். இதற்கும் மனைவி சம்மதிக்கவில்லை. எனவே, தானே நடுவில் படுத்துக் கொண்டான். அவள் உறங்கியதும், குணசீலனை மீண்டும் தங்களுக்கு நடுவே படுக்க வைத்துவிட்டு, தானும் உறங்கிப் போனான்.

இடையில் கண் விழித்த வேடனின் மனைவி, ஓரத்தில் படுத்திருக்கும் கணவனை குணசீலன் எனக் கருதி பரணிலிருந்து தள்ளி விட்டாள். கீழே விழுந்து, மயங்கிக் கிடந்த வேடன், மிருகங்களுக்கு இரையானான். விடிந்ததும் உண்மையை அறிந்து வருந்தியவள், தானும் உயிர் நீத்தாள்.
மனம் கலங்கி பயணத்தை தொடர்ந்தான் குணசீலன். வழியில் ஒரு குடிசை! வாசலில் ஊன்றுகோலுடன் நின்றிருந்த முடவன் ஒருவன், "எங்கு செல்கிறாய்?" என்று கேட்டான். தனது தவ நோக்கத்தைத் தெரிவித்தான் குணசீலன். உடனே முடவன், "தம்பி... ஏனோ எனக்குப் பசியே எடுப்பதில்லை; கடவுளிடம் இதுகுறித்துக் கேள்" என்றான். "ஆகட்டும்" என்று கூறி பயணத்தைத் தொடர்ந்த குணசீலன், அடுத்து நல்ல பாம்பு ஒன்றைக் கண்டான். "எனக்குப் பார்வை தெரியவில்லை. காரணத்தைக் கடவுளிடம் கேட்டுச் சொல்" என்றது பாம்பு. "நிச்சயம் சொல்கிறேன்" என்றவன், அடுத்து மாமரம் ஒன்றைக் கண்டான். "என்னிடம் நிறைய பழங்கள் இருந்தாலும் புழு-பூச்சிகள் வந்து விடுவதால், எவருமே அவற்றை சீண்டுவதில்லை. இதன் காரணத்தைக் கேளேன்" என்றது மாமரம். இதையும் ஏற்ற குணசீலன், அருகில் இருந்த மலையுச்சிக்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தான். ஒரு நாள் அவன் முன் தோன்றிய ஒரு தேவதை, "என்ன வரம் வேண்டும், கேள்" என்றாள்.
அன்னதானம் செய்வதற்கான பலன் குறித்து விளக்கும்படி அவளிடம் வேண்டினான். உடனே தேவதை, "இன்னும் 10 மாதங்கள் கழித்து
உங்கள் நாட்டு அரசனுக்கு ஆண் குழந்தை பிறக்கும். அதன் உடல் தரையில் படுவதற்குள், தங்கத் தாம்பாளத்தில் ஏந்த வேண்டும். பிறகு, அந்தக் குழந்தையிடம் உனது கேள்வியைக் கேள்; விடை கிடைக்கும்!" என்றாள். பிறகு... முடவன், பாம்பு, மாமரம் ஆகியோரது பிரச்னைகளுக்கான காரணத்தையும் தேவதையிடம் கேட்டறிந்தான். தனக்கென எதுவும் கேட்காதவனை மகிழ்ச்சியுடன் ஆசீர்வதித்து மறைந்தாள் தேவதை!
மன நிறைவுடன் ஊர் நோக்கிப் பயணித்த குண சீலன், முதலில் மாமரத்தைக் கண்டான். "போன ஜென்மத்தில் கருமியாக இருந்த நீ, உனது செல்வத்தை தங்கக் கட்டிகளாக மாற்றி புதைத்து வைத்தாயாம்! அந்தப் புதையலில் இப்போது மரமாகி நிற்கிறாய். எனவேதான் உனது காய்-கனிகள் புழு- பூச்சி
களுடன் இருக்கின்றன!" என்று தேவதை கூறிய தைத் தெரிவித்தான். உடனே மாமரம், அந்தப் புதையலை அவனிடமே தந்தது.
புதையலுடன் புறப்பட்டவன், அடுத்து பாம்பை சந்தித்தான். "உன் தலையில் இருக்கும் நாக ரத்தினத்தை, எவருக்கேனும் கொடுத்தால் உனக்குப் பார்வை கிடைக்குமாம்!" என்றான். உடனே நாக ரத்தினத்தைக் கக்கி அவனிடம் கொடுத்த பாம்பு, மீண்டும் பார்வை பெற்றது. அடுத்து முடவனை சந்தித்தவன், "நீங்கள் கற்ற கலையை, பிறருக்கு போதிக்காததே பசியின்மைக்குக் காரணமாம்!" என்றான். உடனே முடவன், தனக்குத் தெரிந்த கலைகளை குணசீலனுக்குக் கற்றுக் கொடுத்தான்! பிறகு ஊர் திரும்பிய குணசீலன், தங்கக் கட்டிகள் மற்றும் ரத்தினங்களை தாயாரிடம் வழங்கினான்.

அரசனின் மனைவிக்குப் பிரசவ நாள் நெருங்கியது. அரண்மனைக்கு விரைந்த குணசீலன், மன்னரிடம் நடந்ததை விவரித்தான். தேவதை கூறியபடி... குழந்தை பிறந்ததும் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தச் செய்தான். பிறகு, "அன்னதானப் பலனைக் கூறுவாயாக!"
என்று குழந்தையிடம் கேட்டான்.
தேவதையின் அருளால் அந்தக் குழந்தைக்கு முற்பிறவி ஞாபகம் வந்து, "நான்தான் உன்னை காட்டில் சந்தித்த வேடன். உனக்கு உணவு கொடுத்த பலனால், ராஜகுமாரனாகப் பிறந்திருக்கிறேன். உணவு கொடுத்ததைத் தடுத்த என் மனைவி, பன்றியாகப் பிறந்திருக்கிறாள்" என்றது!
அன்னதானத்தின் மகிமையை அறிந்து மெய்சிலிர்த்த குணசீலன், தனது வாழ்நாள் முழுவதும் அன்னதானத்தைத் தொடர்ந்தான்!