Saturday, October 24, 2009

காற்றாலை பயணம்

நான் என் அலுவலக வேலையாக நாகர்கோவில் வரை சென்றிருந்தேன். எனக்கு தெரிந்து நான் நாகர்கோவில் செல்வது இது இரண்டாவது முறை. முதல் முறை என் பெற்றோரோடு என் சிறு வயதில் சென்றிருந்தேன்.அப்பொழுது போகின்ற வழியில் ஒன்டிரண்டு காற்றாலைகளை பார்த்ததுண்டு. என் அப்பாவிடம் அதைப் பற்றி கேட்ட ஞாபகம்..... ஆனால் இப்பொழுது சென்று பார்க்கையில் திருநெல்வேலியை கடந்தவுடன் வழி நெடுகிலும் இந்த காற்றாலைகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகம் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதிலும் முதலிடம் வகிக்கிறது என்று ஒரு தினசரி மூலம் நான் அறிந்ததுண்டு. அது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று நான் பார்த்த பொழுது தான் தெரிந்து கொண்டேன்.முன்பெல்லாம் சில அர்ஜுன் படங்களில் வில்லனை அறிமுகம் செய்யும் காட்சியில் சில காற்றாலைகள் ஓடும் அருவியில் வைக்கப்பட்டு சுற்ற வைத்துக் கொண்டிருப்பார்கள்.வில்லன் கோஷ்டியினர் அதன் மூலம் மின்சாரம் எடுப்பார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது......சரி இந்த 'wind mills', காற்றாலைகள் என்ன தெரியுமா? ராட்சத அலகுகள் ('Blades') கொண்ட காத்தாடி ! நம்ம சின்ன வயசிலே பனை மட்டையை எடுத்து ஒரு குச்சியிலயோ அல்லது கருவேல மரத்தின் முள்ளிலோ கட்டி அது கீழே விழாமல் இருப்பதற்க்காக ஒரு ஆட்டுப் புழுக்கையை அந்த முள்ளின் நுனியில் வைத்து வேகமா ஓடிறப்ப சுத்திகிட்டே இருக்குமே! அது நாம் ஓடும் பொழுது காற்றின் விசையாலே சுத்திறதை எத்தனை நாள் பார்த்து சந்தோசப்பட்டிருப்போம்.....சமயத்திலே, அதுக்கு வர்ணம் எல்லாம் பூசி ஒடறப்ப அழகு பார்த்திருப்போம். இதெல்லாம் நான் அந்த பெரிய காற்றாலைக்கு முன் நின்று யோசித்துப் பார்த்தேன்.அந்த சுட்டெரிக்கும் வெயிலில் என்னால் ஒரு ஐந்து நிமிடம் கூட நிற்க முடியவில்லை.அப்பொழுதெல்லாம் வீட்டில் எவ்வளவு அடி வாங்கி, சுட்டெரிக்கும் வெயில் என்று பாராமல் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறோம் என்று மனசுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம். இதெல்லாம் நகர வாசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வேண்டுமென்றால் அவர்கள் ரெடிமேட் காத்தாடிகளை வைத்து விளையாடிருப்பார்கள்.


அது இப்ப நாம் வாழ தேவையான சக்தி கொடுக்குதுன்னா பார்த்துக்கங்களே! இந்த ராட்சத காற்றாலை பண்ணைகளை நீங்க திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி போறப்ப நிறைய பார்த்திருக்கலாம்! அது காலி மைதானத்திலே இந்த நூற்றுக்கணக்கான காற்றாலைகளை நிர்மானித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது! இது மாதிரி நல்ல காத்தடிக்கும் இடங்கள்ல இதை நிர்மானிச்சா, அந்த காத்தின் விசையால் ராட்சச காத்தாடிகள் சுழண்டு அந்த காத்தாடிகளோட இணைக்கப்பட்ட கியர்களும் சுழன்று வட்டமா சுத்துற விசையை கியர் மூலம் மாத்தி அதை ஒரு பெரிய செங்குத்தான தண்டின் ('Tubular shaft')வழியா அந்த விசையை கடத்தி பிறகு அந்த செங்குத்து தண்டுடன் இணைக்கப்பட்ட இன்னொரு சுத்தும் தண்டின் வழியால் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் எடுப்பதே இந்த காற்றாலை மின்சாரம்! இதுக்குன்னு நிலம் வாங்கி இதை நிர்மானிச்சு மின்சாரம் எடுக்க அரசாங்கமே செலவு செய்து! சில சமயம் தனியீட்டார்களின் முதலீடுகளாலும் இது நிர்மானிக்கப்படுகிறது! இப்பொழுதெல்லாம் தனியார் நிறுவங்களின் முதலீடுகள் தான் இந்த துறையில் மேலோங்கி இருக்கிறது. இது போன்று எடுக்கப்படும் மின்சார செலவு கம்மி, ஆனால் ஒரு காற்றாலையின் விலை ஒரு கோடியிலிருந்து இருபது கோடி வரை......அப்புறம் கழிவுகளால் உண்டாகும் மாசு எதுவும் ஏற்படுத்தவதில்லை!
இந்த காத்தாடி இன்னைக்கு நேத்து வந்ததில்லை, இது ஒரு பழைய தொழில்நுட்பம்! அதாவது இதை 12ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிச்சிட்டாங்க! அதிகமா இதன் உபயோகம் ஐரோப்பாவில் தான் முதல்ல இருந்தது, அதுவும் ஹாலந்து நாட்டில் மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகளால் இயங்கப்பட்ட கிணத்து தண்ணி எடுத்து இரைக்கும் கருவிகளால் செஞ்சாங்க, அதாவது நீர்பாசன வசதிகளில் இந்த காற்றாலைகள் ஒரு முக்கியமான அங்கம்! அப்பறம் இந்த இரயில்வே நெட்வொர்க் அந்த காலத்திலே அதிகரிச்சோன, நீராவி இஞ்சின்களுக்கு அங்கங்க தண்ணி இரைச்சு ஊத்த இந்த காற்றாலைகளை பயன் படுத்தினாங்க! அமெரிக்காவில , 1930க்கு முன்னே மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகள் கொண்டு தான் செஞ்சாங்க! அந்த காலத்திலே விவசாயம் மட்டுமில்லை மக்கா சோளம் அரைக்கவும் இந்த் காற்றாலை விசையை உபயோகப்படுத்தினாங்க! ஆனா இந்த மலிவான மின்சாரம் கிடைச்சோன இந்த காத்தாடிகள் அப்படியே செத்து போச்சு! இப்ப எண்ணெய் விலை அதிகம்னோன பழையபடி தூசி தட்டி எடுத்து திருப்பி எப்படி இன்னும் சிறப்பா காற்றாலைகள் நிறுவலாம்னு ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் நம்மவர்கள் பெற்றிருப்பது தமிழர்களாகிய நமெக்கெல்லாம் பெருமை தான்......


Thursday, October 15, 2009

செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னது ஒரு ஜோக்

பிரபாகரனுடன் இருந்திருந்தால் இன்னேரம் செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
மேலும் காமெடியைப் படிக்க :

http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

Monday, October 12, 2009

வராலாறுகளில் பெண் ஆட்சியாளர்கள்

வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அன்றைய மெரோவி (Meroe) ராஜ்ஜியத்தை கி.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஷ் (Cush) அரசி ஆண்டிருக்கிறார்! இதன் தலைநகராக குஷிட்டே (Cushite) இருந்துள்ளது. இன்றைக்கு இந்த நாடு சூடான் என்று நம்பப்படுகிறது! இவர்தான் முதல் பெண்ணரசி என்ற பெருமையைப் பெறுகிறார்!
கி.மு.35ல் ஸ்ரீலங்காவை அரசி சிவாலி ஆண்டார்! இவர் தமிழகம் வழி வந்த தமிழ்ப் பெண் என்பாரும், சிங்களவப் பெண்ணரசி என்று சொல்வாரும் உண்டு! இவருக்குப் பின் அரசி அனுலா கி.மு. 42லிருந்து 47வரை ஆட்சி செய்தார்!
எகிப்தை ஏழாவது கிளியோபாட்ரா(Queen Cleopatra VII ) கி.மு 50 லிருந்து 51 வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின் கி.மு.80-81ல் பெர்நீஸ் ஆட்சி செய்தார். அரசி அர்சினோவ் (கி.மு.270முதல் 279வரை) அரசி நெ·ப்ரேட்டரி (கி.மு. 1225லிருந்து 1292 ) அரசி நெ·ப்ரேட்டிட்டி (கி.மு 1350-1372 ) அரசி டையீ (கி.மு.1340-1415) அரசி ஹேட்செப்ஸ்ட் (கி.மு.1498-1501) ஆகியோர் எகிப்தை ஆட்சி செய்துள்ள பெண் அரசிகளாவார்கள்!
பிரிட்டனின் அன்றைய இசினியா என்றழைக்கப்பட்ட நாட்டின் அரசன் பிராஸ்டகஸ் கி.பி.60ல் இறந்துவிட 61ல் அவனது மனைவி பொடீசியா ஆட்சிக்கு வந்தார். பின்னர் ரோமானியர்கள் இவளது ஆட்சியைக் கைப்பற்றினர்.
இலங்கையை ஸ்ரீமாவோ பண்டாரநாயகா மும்முறை ஆட்சி செய்தவர் இவர்தான் முதல் பெண் பிரதமர்! இவரின் மகளான சந்திரிகா குமாரதுங்கா தனது தாயாரை பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானதும் குறிப்பிடத்தக்கது!
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேருவின் மகளான இந்திராகாந்தி இரண்டு முறை பதவி வகித்த பிரதமரும் உலகின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார்! (19 ஜனவரி 1966 முதல் 24 மார்ச் 1977 வரையிலும், 14 ஜனவரி 1980 முதல் 31 அக்டோபர் 1984 வரை பிரதமராக இருந்தார். பதவியிலிருந்த போது மெய்க்காப்பாளர்களில் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் இவர்!
இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் கோல்டா மேயர் (1969-1974) உலகில் மூன்றாவது பெண் பிரதமர்!
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பிரதமராக இருந்தவர் எலிசபெத் டோமிட்டின்(1975-1976)
பிரிட்டனின் தேர்ந்த்டுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் தாட்சர்!(4 மே1979 முதல் 28நவ.1990 வரை) ஐரோப்பிய நாடுகளிலிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் உடையவர்.
ஏஞ்செலா மெர்க்கெல் ஜெர்மனின் கூட்டரசு வேந்தராக 22 நவம்பர் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார்.
சாவோ டோம் மற்றும் பிரின்சிபே நாட்டின் பிரதமராக மரியா டோ கார்மோ சில்வேரா 8 ஜூன் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முன் மரியா டாஸ் நேவாஸ் செய்டா பேப்டிஸ்ட்டா டி செளஸா 7 அக்டோபர் 2002 முதல் 16 ஜூலை 2003வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்தார்.
உக்ரைன் நாட்டின் பிரதமராக யூலியா டிமோஷென்கோ 24 ஜனவரி முதல் அந்த ஆண்டு செப்டெம்பர் 8ம் தேதி வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்தார்.
ராட்மிலா சேகெரின்ஸ்கா மசிடோனியாவின் பொறுப்பு பிரதமராக 2004ம் ஆண்டு இருந்தார்.
லூயிஸா டயஸ் டியாகோ ஆப் மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக 17 பிப்ரவரி 2004 லிருந்து பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்று இருந்து வருகிறார்.
பின்லாந்தின் முதல் பெண் பிரதமராக அன்னெலி டுலிக்கி ஜாட்டீன்மாகி 2003ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து ஜூன் 18ம் தேதிவரை மூன்று மாதங்கள் பதவி வகித்து விட்டு சொந்தக் காரணங்களால் பொறுப்பிலிருது ராஜினாமா செய்தார்.
தென்கொரியாவின் பிரதமராக சாங் சேங்கை அந் நாட்டு அதிபர் கிம் 2002ல் நியமித்தார். பாராளுமன்றம் இந்த நியமனத்தை நிராகரிக்கவே பத்து மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!
1999 டிசம்பர் 10லிருந்து ஹெலன் எலிசபெத் கிளார்க் நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வருகிறார். இவருக்கு முன் ஜென்னி ஷிப்லே 1997 லிருந்து டிசம்பர் 1999 வரை பிரதமராக இருந்தார். இவரே இந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற தகுதியும் உடையவர்!
நார்வே நாட்டின் பிரதமராக மூன்று முறை இருந்த பெருமை குரோ ஹார்லெம் ப்ருண்ட்லாண்டுக்கு உண்டு. இவர் உலக சுகாதார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாவின் வாழ்விலே


காந்தியடிகள் கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கு ஒருவர் அவருக்குத் துணையாக கண்காட்சியைப் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டே வந்தார்.ஒரு இடத்தில் அருகருகே இரண்டு தேனீக்கள் வளரும் பெட்டி இருந்தது. அதைக் காட்டிய அவர், "ஒரு பெட்டியில் உள்ள தேனீ மறந்தும் கூட அடுத்த பெட்டிக்குப் போகாது. எதிர்பாராமல் போக நேர்ந்தால் அடுத்த பெட்டியில் உள்ள தேனீக்கள் புதிதாக நுழைந்த தேனீயைக் கொன்று விடும்" என்றார்.இதைக் கேட்ட காந்திஜி வாயில்லாப் பூச்சியாக இருந்தாலும் அதற்குண்டான அறிவுத் திறமையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அப்போது விளக்கம் அளித்துக் கொண்டு வந்தவர் முதல் பெட்டியின் வாயிலில் இருந்த ஒரு தேனீயை பிடித்தி பக்கத்துப் பெட்டியின் நுழைவாயிலில் வைத்து விட்டார்.உடனே காந்திஜி குறுக்கிட்டு, "வேண்டாம் நீங்கள் சொல்லியதே போதும். நான் புரிந்து கொண்டேன். அந்த உயிரை ஹிம்சை பண்ண வேண்டாம்." என்றார்.சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆசாமி தேனீயை பக்கத்துப் பெட்டியின் உள்ளே வைத்து விட்டார். உடனே அந்த பெட்டியிலிருந்த தேனீக்கள் அனைத்தும் ஒன்று கூடி இந்தத் தேனீயைக் கொட்டிக் கொன்று வெளியே தள்ளி விட்டன. அனைத்தும் சில வினாடிகளிலேயே முடிந்து விட்டன.இந்தக் காட்சியைக் கண்ட காந்திஜியின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த மனிதரைப் பார்த்து, "ஓர் உயிர் மாண்டு போக காரணமாக இருந்து விட்டீர்கள். உம்மால் உயிர் தந்து அதைப் பிழைக்க வைக்க முடியுமா? இனி நான் இந்தக் கண்காட்சியைக் காண மாட்டேன்" என்று சொல்லி வருத்தத்துடன் திரும்பி விட்டார்.காந்தியடிகள் சிறிய உயிரினமான தேனீயின் உயிர் சித்திரவதையைக் கூட விரும்ப மாட்டார். அனைத்து உயிரிடத்திலும் அன்பு கொண்டவர் அவர்.
காந்திஜி வெள்ளையனே வெள்ளையேறு என்று முழக்கமிட இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வழியில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ்கண்டவாறு கூறினார்.
"இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ ஆயுதங்களைப் புறக்கணித்துவிட்டு அகிம்சை, சத்தியம் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார்கள். இவற்றை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "
சர்ச்சில் இப்படிக் கூறியது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் திகைக்க வைத்தது.
ஓர் சமயம் ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது காந்தியை கிண்டல் செய்யும் நோக்கத்துடன், ""காந்திஜி, உங்கள் மக்கள் ஏன் உங்களைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டனர்? வேறு சிறந்த தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?'' என்று கேட்க, உடனே மஹாத்மா காந்தி பெருந்தன்மையாக.... ""உங்களை (ஆங்கிலேயர்) சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்'' என்றார்.
காந்திஜி ஒரு நாள் சலவைக்கூலி அதிகமாக ஆவதைக் கவனித்தார். மேலும் சலவைக்குப் போடப்பட்ட துணிகள் குறித்த காலத்தில் கிடைக்காமல் இருந்தன. எனவே, துணிகளைத் தாமே சலவை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே சலவை செய்யும் முறைகளை விளக்கும் புத்தகம் ஒன்றை வாங்கி வந்து படித்தார். சலவை செய்யும் முறைகளையும், இஸ்திரி போடுவது குறித்தும் கற்றுக் கொண்டார்.
முதன்முறையாக அவர் சலவை செய்த உடையைப் போட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கிருந்தவர்களெல்லாம் அவரைப் பார்த்து சிரித்தார்கள். அதன் காரணம் பின்னால்தான் தெரிந்தது.
முதன்முறையாதலால் காந்திஜி சலவை செய்த சட்டைக்கு அதிகமாகக் கஞ்சி போட்டு விட்டார். அதனால் அவருடைய சட்டைக் காலரிலிருந்து கஞ்சிப்பசை காய்ந்து உதிர்ந்து கொண்டிருந்தது. இதைக்கண்டுதான் மற்றவர்கள் சிரித்தார்கள். ஆனால், காந்திஜி பிறர் சிரிப்பதைப் பற்றி என்றுமே கவலைப்படுவதில்லை. தமது செயலில் மட்டும் கருத்தாக இருப்பார்.
சலவைத் தொழிலைத் தாமே செய்தது போல் முடிவெட்டும் தொழிலையும் அவரே செய்யத் தொடங்கினார்.
ஒருநாள் காந்திஜி முடிவெட்டும் கடை ஒன்றுக்குச் சென்றார். அங்கே முடி வெட்டியவர் ஓர் ஆங்கிலேயர். ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு முடி வெட்டமாட்டார்கள். ஆகவே, அவர் காந்திஜிக்கு முடிவெட்ட மறுத்து விட்டார். அத்துடன் ஏளனமாகவும் பேசினார். இதனால் காந்திஜியின் மனம் புண்பட்டது.
காந்திஜி உடனே கடையில் முடி வெட்டும் ஒரு கத்தரி வாங்கிக் கொண்டார். கண்ணாடியின் முன் நின்று தாமே முடிவெட்டிக் கொண்டார். முன்பக்கம் ஓரளவு சரியாகயிருந்தாலும் பின்பக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் அப்படியே நீதிமன்றத்திற்குச் சென்றார்.
நீதிமன்றத்தில் எல்லோரும் காந்திஜியைப் பார்த்து சிரித்தார்கள். உங்கள் முடியை எலி கத்தரித்து விட்டதா? என்று கேலி செய்தார்கள். காந்திஜியோ, "வெள்ளைக்கார நாவிதன் என்னுடைய கருப்பு முடியை வெட்ட மறுத்து விட்டான். ஆகையால் நானே வெட்டிக்கொண்டேன்" என்று பதில் சொன்னார். அதற்குமேல் அவர்கள் பதில் ஏதும் பேசவில்லை. காந்திஜியும் தாமே முடிவெட்டிக் கொள்வதையும் நிறுத்தவில்லை.
தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ள வேண்டும். எந்த வேலையும் தாழ்வானதில்லை, எல்லாம் உயர்ந்தவைதான்." என்பது காந்திஜியின் கொள்கை. இதை அவர் தம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி அதன்பிறகே பிறருக்கு எடுத்துச் சொன்னார்.

Thursday, October 8, 2009

உங்களுக்குத் தெரியுமா?

 • காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
 • Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.
 • சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.
 • அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.
 • ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous
 • "The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
 • abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.
 • ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.
 • ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்.
 • உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
 • ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
 • மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.
 • இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.
 • a,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

Wednesday, October 7, 2009

நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் நான்காவது மனைவியை மட்டும் அவன் அதிகமாக நேசித்து அவளை நன்றாகக் கவ்னித்துக் கொண்டான். அனைத்திலும் சிறந்ததை அவளுக்குக் கொடுத்தான். மூன்றாவது மனைவியையும் நேசித்தான். அவளைப் பற்றி எப்பொழுதும் தன்னுடைய நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். எனினும் அவள் வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள் என்கிற பயம் அவனுக்கு இருந்தது. அவன் தன்னுடைய இரண்டாவது மனைவியையும் நேசித்தான். அவனுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவன் எப்பொழுதும் அவளின் உதவியை நாடுவான். அவளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுவாள். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தன் நான்காவது மனைவியை அழைத்து, "நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் கூறிய பதில் கூர்மையான கத்தியைப் போல் வணிகனின் இதயத்தைக் குத்தியது.
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்." என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவன் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, "நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது "நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்" என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
இப்படித்தான் வாழ்க்கையின் உண்மை அறியாமல் தவிக்கிறார்கள்.

கவசம் எப்போது பாதுகாக்கும்

தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த வீரன் ஒருவன் அக்பருக்கு இரும்புக் கவசம் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். போர்க் காலத்தின் போது பாதுகாப்பிற்காக இரும்புக் கவசத்தை அணிந்து கொள்வதற்குத் தகுந்த முறையில் வீரன் கவசத்தை உருவாக்கி இருந்தான்.இரும்புக் கவசத்தைப் பார்த்து மகிழ்ந்த மன்னர் அதனை அரண்மனையிலிருந்த சிலை ஒன்றுக்கு அணிவிக்கச் சொன்னார். படை வீரர்களைக் கூப்பிட்டு சிலையை வாள்களால் தாக்குமாறு உத்தரவிட்டார். வாள்களால் தாக்கிய பின்பு சிலை உடையாமல் உள்ளதா? என்பதைச் சோதிக்க விரும்பினார்.வீரர்களும் சிலை மீது பலம் கொண்ட மட்டும் ஆயுதங்களால் தாக்கினார்கள். சிலை சிதறி மண்ணில் விழுந்தது. வீரர்கள் சிலை உடைந்து போன விபரத்தை மன்னரிடம் கூறினார்கள். மன்னர் அதிர்ச்சியுடன் சிலையைப் பரிசளித்த வீரனைக் கூப்பிட்டு கோபமாய்ச் சத்தமிட்டார்."மூடனே, நீ கொடுத்து விட்டுப் போன கவசத்தை அணிந்து போருக்குச் சென்றால் என் நிலைமை என்ன ஆகும்?" என்று ஆவேசத்துடன் கத்தினார். அன்பளிப்பு தருவார் என எதிர்பார்த்திருந்த வீரனுக்கு அக்பரின் கோபமான வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்தியது. மன்னரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட வீரன் அடுத்த முறை நல்ல கவசத்தைச் செய்து வருவதாகக் கூறிச் சென்றான்.இதையறிந்த பீர்பால் கவசமளித்த வீரனைக் கூப்பிட்டார். அரசர் கூறியது போல் உறுதியான கவசத்தை உருவாக்கிக் கொண்டு முதலில் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். சில நாட்கள் கடந்தன. இரவு பகலாய்க் கண்விழித்து புதிய இரும்புக் கவசம் ஒன்றை உருவாக்கி அதை பீர்பாலிடம் கொண்டு வந்து காண்பித்தான். பீர்பால் அவ்வீரனிடம் சில யோசனைகளைக் கூறினார். அதன்படி அவ்வீரன் அக்பரைக் காணச் சென்றான்."அரசே, இந்த முறை நான் செய்து கொண்டு வந்திருக்கும் கவசம் மிகவும் உறுதியானது. பரிசோதித்துப் பார்த்தால் அதன் உண்மை புரியும்" என்றார்.அக்பரும் தனது பணியாளைக் கூப்பிட்டு அந்தக் கவசத்தை வேறொரு சிலையில் மாட்டச் சொன்னார்."அரசே, இம்முறை இந்தக் கவசத்தை சிலைக்கு அணிவிக்க வேண்டாம். நானே மாட்டிக் கொள்கிறேன். உங்கள் வீரர்களை வாளைக் கொண்டு என்னைத் தாக்கச் சொல்லுங்கள்" என்றான்.அக்பர் அதிர்ச்சி அடைந்தார். "உன் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது?" என்றார் அக்பர்."என் உயிரை விட உங்கள் உயிர் முக்கியம். தயங்க வேண்டாம். அரசே என்னைத் தாக்கச் சொல்லுங்கள்." என்றான் அவ்வீரன். உடனே அக்பரும் வீரனைத் தாக்குவதற்கு உத்தரவிட்டார். அரண்மனை வீரர்கள் ஆயுதங்களால் தாக்கத் துவங்கினார்கள்.இரும்புக் கவசம் அணிந்திருந்த வீரன் அனைத்து போர்முறைப் பயிற்சிகளையும் கற்றிருந்தபடியால் அரண்மனை வீரர்களைத் திருப்பித் தாக்கினான். உடலில் கவசம் அணிந்திருந்ததால் அவனுக்கு அடி எதுவும் படவில்லை. அரண்மனை வீரர்களுக்குக் காயமேற்பட்டது. இதைக் கண்ட அக்பர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சண்டையை நிறுத்தும்படி கூறினார்."வீரனே, எதற்காக எமது வீரர்களிடம் சண்டையிட்டாய்?" என்றார் அக்பர்."மன்னிக்க வேண்டும் அரசரே! இந்தக் கவசத்தை அணிந்து கொண்டு தாங்கள் போருக்குப் போகும் போது எதிரிகள் உங்களைத் தாக்கினால் நீங்கள் திருப்பி சண்டையிடுவீர்கள் அல்லவா? அப்படித்தான் என்னை ஆயுதங்களால் தாக்கியவர்களை நான் தடுத்து நிறுத்தி, திரும்பத் தாக்குதலை நடத்தினேன்." என்றான்.அக்பருக்குத் தன் தவறு புரிந்தது.வீரனுக்கு இந்த யோசனையைச் சொன்னவர் பீர்பால்தான் என்று தெரிந்து கொண்டு அவரையும் பாராட்டினார்.

Tuesday, October 6, 2009

நடிகவேள்

எம்.ஆர்.ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர். அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ் ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ் ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர். அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார். அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்தி ருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா. ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்.

1966ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார்.

பெரியாரின் போர்ப்படைத்தளபதியாய் வாழ்ந்த சுயமரியாதை வீரன் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவிற்கு 'நடிகவேள்' பட்டம் அளித்தவர். இன்று உலகமெங்கும் புகழ்பெற்று பெயர்போலவே மாறிவிட்ட 'கலைஞர்' என்னும் பட்டத்தைக் மு.கருணாநிதிக்கு வழங்கியவர் ராதாதான்.

இளவயதில் சாதனை படைத்தவர்கள்

இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத்சிங் வயது 23

புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27

ஜான்சி ராணி வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டபோது வயது 25

திருப்பூர் குமரன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் ரத்தம் சிந்திய போது வயது 26


அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது படையெடுத்த போது வயது 22


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்த போது வயது 24


கலிலியோ தெர்மொமீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20


மார்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கிய போது வயது 17


கிரகாம்பெல் தொலைபேசியை கண்டறிந்த போது வயது 29


பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்த போது வயது 19


மாண்டலின் சீனிவாசன் புகழ் பெற்ற போது வயது 15

Monday, October 5, 2009

தற்செயலாக உருவான விஞ்ஞானம்

மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் தற்செயலாக கீழே விழுந்தது. அதை பார்த்துதான் புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார். இது போலவே பெரும்பாலான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில உங்களுக்காக.....

சர்ச்சின் பிரார்த்தனை கூடத்தில் அமர்ந்திருக்கும் போது அங்கு அலங்கார விளக்குகள் லேசாக ஆடிக்கொண்டிருந்ததை கவனித்தார் கலிலியோ. இதன் மூலம் தான் தனி ஊசல் தத்துவத்தை உருவாக்கினார்.

காது கேளாதவர்களுக்கு ஒரு கருவியை கண்டுபிடிக்க முயன்ற போது தான் கிரகாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்தார். ஒருமுறை தன் உதவியாளர் வாட்சனை கீழ் அறைக்கு அனுப்பி அங்கிருக்கும் கருவியில் ஏதாவது கேட்கிறதா என்று கவனிக்க சொன்னார். மாடியில் உள்ள அறையில் உள்ள கருவியில் கிரகாம் பெல் பேசுவார்.ஆனால் கீழே இருக்கும் வாத்சொனுக்கு ஒன்றுமே கேட்காது.தினமும் இதே வேலை தான். ஒரு நாள் மாடியில் இருந்த பெல் மீது ஒரு ஆசிட் குடுவை பட்டு தீப்பற்றி கொண்டது.பயந்து போன பெல், வாட்சன் கம் ஹியர், ஐ நீட் யு என்று சொன்னார். எதிர்பாராத விதமாக கீழ் இருந்த அறையில் உள்ள கருவியில் அந்த குரல் கேட்டது. மேலே நடந்த விபத்தினை அறியாத வாட்சன் வேலை செய்யுது....வேலை செய்யுது.... என்று கத்திக் கொண்டே மாடிக்கு ஓடினார். இவ்வாறு தான் தொலைபேசி பிறந்தது.

ஜான் வால்கர் என்பவர் ஒரு பார்மாசிஸ்ட். ஒரு நாள் இவர் தரையில் வேதிப் பொருள் ஒன்றை கொட்டிவிட்டார். ஒரு குச்சியை எடுத்து ஒரு முனையால் அதை அகற்றினார்.அப்பொழுது அந்த குச்சி தீப்பற்றி எரிந்தது.இதை வைத்துத்தான் தீக்குச்சியை கண்டுபிடித்தார்.

Sunday, October 4, 2009

காமராஜரின் கமெண்ட்!

கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார். உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே. ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!

சாணக்கியர்

மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்!இவர் ஒரு நாள் அரசவையில், "மன்னா, ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தார். அரசனும் இதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தான்.அரசாங்க செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன. இந்த விஷயம், ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்கும் தெரிய வந்தது. அன்று இரவு, சாணக்கியரது வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். திட்டப்படி அன்று இரவு சாணக்கி யரது வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு, அரதல் பழசான - கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர். அருகில் அவரின் தாயாரும் அப்படியே! கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்!கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார். எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், "ஐயா... நாங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம். இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும் நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே?'' என்று கேட்டான்.அதற்கு சாணக்கியர், "அவை, ஏழை- எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள். அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார்.இதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர். 'இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம்' என்று அவர் முன் சத்தியமும் செய்தனர்!சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்... அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்!

தமிழ் நடிக நடிகையரின் டைவர்ஸ்

 1. ஊர்வசி
 2. பிரசாந்த்
 3. மோகினி
 4. ரோகினி
 5. சொர்ணமால்யா
 6. சுகன்யா-ஸ்ரீதர்
 7. பாபிலோனா
 8. டான்ஸ் மாஸ்டர் கலா- ஆர்.கோவிந்தராஜன் (சிநேகாவின் அண்ணன்)
 9. சுலக்ஷனா - எம்.எஸ்.வி.கோபி
 10. ரேவதி - சுரேஷ்மேனன்
 11. கவுதமி
 12. ராமராஜன் - நளினி
 13. சீதா - பார்த்திபன்
 14. கமல்ஹாசன் (இருமுறை)- வாணிஸ்ரீ, சரிகா
 15. சரண்யா - ராபர்ட்
 16. டாக்டர் ஷர்மிளா - ஏ.எல்.என்.மோகன்
 17. ஸ்ரீவித்யா - ஜார்ஜ்
 18. அம்பிகா- (ஒருமுறை)
 19. ராதிகா - (இருமுறை)
 20. சரத்குமார் - சாயா
 21. விஜயகுமாரி - எஸ்.எஸ்.ராஜேந்திரன்
 22. லட்சுமி - (மூன்று முறை)
 23. ஐஸ்வர்யா (ஒரு முறை)
 24. சுஜாதா
 25. சரிதா-முகேஷ்

Friday, October 2, 2009

கை வண்ணம்


காந்தி ஜெயந்தி


காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. இஸ்லாமிய இளைஞன் ஒருவன் காந்திஜியை சந்தித்தான். ''பாபுஜி! எனக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்திருந்தால், நிறைய சம்பாதிப்பேன். ஆனால் இப்போது, அரை வயிற்றுக்குத்தான் என்னால் சம்பாதிக்க முடிகிறது!'' என்று வருத்தத்துடன் கூறினான். உடனே காந்திஜி, ''கவலைப்படாதே! இனி, தினமும் உனக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறேன்'' என்றார். இளைஞன் மகிழ்ந்தான் எனினும் தயக்கத்துடன், ''ஆனால், பாபுஜி... வேலையை விட்டு விட்டு, தினமும் என்னால் இங்கு வர முடியாதே!'' என்றான்.அவனைப் பார்த்துப் புன்னகைத்த காந்திஜி, ''அப்படியானால், தினமும் நானே உனது இடத்துக்கு வந்து கற்றுத் தருகிறேன்!'' என்றார். அதன்படி, தினமும் சுமார் 6 கி.மீ. தொலைவு நடந்து சென்று, அந்த இளைஞனுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தாராம் காந்திஜி!


தன் ஆசிரமத்தில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தார் காந்திஜி. அன்று அவர் மௌன விரதம். வழியில், இரண்டு அங்குல நீளமுள்ள பஞ்சு ஒன்று சாலையில் கிடப்பதைக் கண்டார். தன்னுடன் வருபவர்களிடம் அதைச் சுட்டிக்காட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் காந்திஜி.உடன் வந்தவர்களில் ஒரு பெண்மணி, 'சுற்றுப்புறத் தூய்மையில் நாட்டம் கொண்ட பாபுஜிக்கு, சாலையில் கிடக்கும் இந்த பஞ்சு உறுத்தலாக உள்ளது போலும்' என்ற எண்ணத்தில் அதை எடுத்துக் கொண்டாள்!மாலையில், மௌன விரதத்தை நிறைவு செய்தார் காந்திஜி. பிறகு, தனது ராட்டையை எடுத்து நூல் நூற்க அமர்ந்தவர், சாலையில் இருந்து எடுத்து வந்த பஞ்சுத் துண்டை தரும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டார்.அவள் திகைத்தாள். ''சிறிய பஞ்சுதானே என்று அதைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டேன் பாபுஜி'' என்றாள் தயக்கத்துடன். காந்திஜியின் முகம் மாறிற்று. ''இதுவே, ஒரு தம்பிடியாக இருந்திருந்தால், மிகச் சொற்பமான காசுதானே என்று தூக்கி எறிந்திருப்பாயா?'' என்று கேட்டார். ''எறிந்திருக்க மாட்டேன்'' என்றாள் அவள்.''பருத்தியைப் பயிரிடுவதிலும் அதைச் சுத்தப்படுத்திப் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகிறது என்று உனக்குத் தெரியாதா? அதை எறிந்தவன் பாவம் செய்து விட்டான் என்பதில் சந்தேகமே இல்லை. இதுகுறித்து பலமுறை விளக்கியும் இதன் மதிப்பை உணராத நீ, இரட்டைக் குற்றம் செய்தவள் ஆகிறாய். போ... போய் அதைக் கொண்டு வா!'' என்றார் காந்திஜி. ஓடோடிச் சென்ற பெண்மணி, குப்பைத் தொட்டியில் இருந்து அந்த பஞ்சைத் தேடிப் பிடித்து எடுத்து வந்தாள்.அதை வாங்கிக் கொண்ட காந்திஜி, ''துணியாக நெய்த பிறகு, இதன் அழுக்கை எளிதில் அகற்றி விடலாம்'' என்றபடி, தான் ஏற்கெனவே வைத்திருந்த பஞ்சுடன் சேர்த்து நூல் நூற்க ஆரம்பித்தார். அவரது எளிமை மற்றும் சிக்கனத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்!