தேர்தல் நெருங்கும் வேளையில் 👀 😉😉😉 என் மனதில் புதைந்துள்ள சில கருத்துக்களை என் மனதில் மட்டும் இல்லை தமிழனாய் பிறந்த எல்லோர் மனதிலும் உள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு....
தேர்தல் என்றாலே அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கலில் ஈடுபடுவர். அவர்களில் பலபேர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். அவர்களில் எத்தனைப் பேர் கடந்த முறை மக்களுக்காக உண்மையாக பாடுபட்டிருப்பார்கள்???? கூட்டணி கட்சியில் இருக்கும் பெரும்பாலான வேட்பாளர்களுக்கும் இந்த தேர்தல் இரண்டாவதோ அல்லது மூன்றாவதாக இருக்க வாய்ப்புள்ளது. கடந்த முறை அவர்கள் எல்லோரும் தனது தொகுதிகளுக்காக எத்தனை முறை சட்ட மன்றத்திலே வாயை திறந்திருப்பார்கள்!!!!! நாடாளுமன்றத்தைப் போல பேசாத உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டால் நாறிப்போயிருக்கும் அவர்களின் நிலைமை.
நமது வாக்காளர்கள் அதையும் செய்திதாளில் படித்து விட்டு வரும் தேர்தலில் அவருக்கே தனது ஓட்டை பதிவு செய்து விடுவர். எனக்கு நீண்ட நாள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மனுதாக்கல் செய்த அல்லது செய்யப்போகிற எத்தனை வேட்பாளர்களுக்கு தனது கட்சியின் முழு வரலாறு தெரியும்??? நான் சாலையில் கடந்து செல்லும்பொழுது பல ஊர்வலங்களில், ஆர்ப்பாட்டங்களில் வாக்களிக்கக் கூட உரிமை இல்லாத பல இளைன்கர்கள் மற்றும் மாணவர்களை கண்டிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் தெரியுமோ தெரியாதோ ஏன் இந்த ஆர்ப்பாட்டமும்,ஊர்வலமும் என்று... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது அரசியல் என்பது ஒரு முதல் போடாத தொழில் என்று.
ஆனால் அதுவும் இப்பொழுது பொய்த்துப் போனது. அதற்கு உதாரணம் நேர்காணலுக்கு வந்த உடன்பிறப்பு ஒருவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார் கருணாநிதி. தென் மாவட்டங்களின் வேட்பாளர் நேர்காணலின்போது, கழுத்திலும் கையிலும் கிலோக்கணக்கில் தங்க நகைகளை அணிந்து வந்தாராம் உடன்பிறப்பு. 'எவ்வளவுய்யா செலவு செய்வே...’ என்று அவரிடம் கேட்கப்பட, 'அய்யா, அஞ்சு கோடி செலவு செய்வேன்யா’ என்றார் அவர். உடனே கருணாநிதி, 'அஞ்சு கோடிக்கு எத்தனை சைபர் தெரியுமா?’ என்று கேட்க, உடன்பிறப்போ திருதிருவென விழித்தார். 'அஞ்சு கோடிக்கு எத்தனை சைபர்னு தெரியலை... நீ எம்.எல்.ஏ-வாகி என்ன செய்யப்போற? போயிட்டு வா.’ என்று அனுப்பிவிட்டாராம்!
இலவசம் இலவசம் என்று சொல்லி மக்களின் சுயமரியாதையை இழக்க செய்து விட்டது சுயமரியாதை இயக்கம். மக்களை சிந்திக்க விடாமல் இலவசங்களை கொடுத்து முட்டாள்களாக்கி வைத்து விட்டனர். கிரைண்டர் வேண்டாம் என்றால் மிக்ஸ்சீயாம். அதை உபயோகப்படுத்துவதற்கு மின்சாரம் எங்கே தமிழ்நாட்டில். அரசு அறிவிப்போடு இரண்டு மணிநேரம் அறிவிப்பின்றி ஐந்து முதல் எட்டு மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு. நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு எல்லாம் இது ஒரு செய்தியாகத் தான் தெரியும். ஆனால் கிராமங்களில் வாழும் மக்களுக்கு இதனால் எவ்வளவு இன்னல்கள்.
அனைத்து கட்சிக்கூட்டங்களிலும் இளைன்கர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிறார்கள் ஆனால் என்னைப் பொறுத்தவரை இளைஞகர்கள் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம். சிரமம் பார்க்காமல் தேர்தல் அன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாலே போதுமானது. வாக்கு பதிவு சதவிகிதத்தை உயர்த்திக்காட்டினால் தான் கள்ள ஓட்டை ஓரளவாது குறைக்க முடியும். ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் நாட்டை காப்போம்.