Saturday, May 7, 2011

எம்.ஜி.ஆர் 311977 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று ‘இந்து’ ஏடு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தது.

”முதல்வர் பதவி என்பது அதிகாரம் வாய்ந்தது அல்ல. அதிகாரமும் பணபலமும் உள்ள பலரைத் தினமும் ச்ந்திக்க வேண்டிய ஓர் இடமே தவிர அதிகாரம் குவிந்துள்ள இடமல்ல என்று எம்.ஜி.ஆர் கூறியிருப்பதைப் பார்த்தால், அவர் முதல்வர் பதவி என்பது எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதையே தெளிவு படுத்துகிறது. தம்மை முதல்வர் பதவியில் அமர்த்திய அந்த மக்கள் சக்தியே தமக்கு எல்லாவிதமான எதிர்ப்புகளிலிருந்தும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். மக்களிடமிருந்து எந்தக் கருத்து வந்தாலும் அதை அவர் சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பார் என்பது உறுதி. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் எம்.ஜீ.ஆர். உற்சாகத்துடன் ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறார்”என்று கூறியிருந்தது.

முதல்வர் பதவியேற்ற புரட்சித் தலைவர், அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற தம் சகாக்களை அழைத்து, ”எதைச் செய்தாலும் அதில் ஏழைகளுக்கு என்ன நன்மை கிட்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செய்யுங்கள்” என்று கூறினார்.

மாநில அரசுகள் எதற்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதை புரட்சித் தலைவர் புரிந்து கொண்டார். மாநில அரசின் வருவாய் முழுவதும் கல்வி, சுகாதாரம், அரசு நிருவாகம் ஆகியவற்றுக்கே போய்விடுகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.

”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”

இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.

இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.

1978 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, இந்திரா காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகள் மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மகத்தான வெற்றி கிட்டியது. மொத்தமுள்ள 65 வட்டங்களில் (Wards) அ.தி.மு.க.வுக்கு 37 இடங்களும், இந்திரா காங்கிரசுக்கு 9 இடங்களும், கிடைத்தன. ஜனதாக்கட்சி தோல்வியடைந்தது. மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது! இதுவும் புரட்சித் தலைவரின் சாதனைகளுள் ஒன்றாகும்.

1978 ஆம் ஆண்டு செப்டம்பரில் மக்கள தி.மு.க. கலைக்கப்பட்டது. அக்கட்சி
யில் இருந்த நாவலர், ப.உ.ச, கே.இராஜாராம், செ.மாதவன் முதலியவர்கள் அ.இ.அ.தி.மு.க வில் சேர்ந்தனர்.

நாவலரைத் அ.இ.அ.தி.மு.க. தலைவர் பதவியிலும், ப.உ.ச.வை பொதுச் செயலாளர் பதவியிலும், மாதவனை கழகப் பொருளாளர் பதவியிலும், அமர்த்திக் கவுரவித்தார். புரட்சித் தலைவர். மாதவனைத் தவிர மற்ற மூவரையும் பின்னர் தம் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொண்டார்.முற்றும்...