Tuesday, March 23, 2010

லேடீஸ் பர்ஸ்ட்

லேடீஸ் பர்ஸ்ட் என்று சொல்கின்ற நாடே முன்னேறும் என்ற வழக்கம் ஒன்று பரவலாகியுள்ளது. லேடீஸ் பர்ஸ்ட் என்ற வார்த்தையை இப்பொழுது எல்லோரும் எல்லா இடத்திலும் உபயோகபடுத்துகிறார்கள்.சில ஆணாதிக்க ஆண்கள் உட்பட.... இதனால் பெண்கள் யாரும் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். இந்த லேடீஸ் பர்ஸ்ட் என்ற வார்த்தை எப்படி தோன்றியது தெரியுமா????

ஐரோப்பாவிலிருந்து சில தம்பதியர்கள் ஆப்ரிக்கா நாட்டிற்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர். ஆப்ரிக்காவை வந்தடைந்ததும் அவர்களின் ஆர்வம் அதிகமாகி ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் பயணமாக ஆயத்தமாயினர். இரண்டு நாள் பயணத்திற்கு பிறகு அவர்கள் நர மாமிசம் சாப்பிடும் ஆதிவாசிகளிடம் மாட்டிக்கொண்டனர். சந்தோஷமடைந்த ஆதிவாசிகள் அவர்களிடம் எங்களுக்கு சரியான உணவாக நீங்கள் கிடைத்திருகீர்கள்.தினமும் ஒவ்வொருவராக நாங்கள் உண்ண போகிறோம் என்று அவர்களிடம் கூறினர். பயத்தில் உறைந்து போன தம்பதியர்கள் தப்பிக்க முடியாமல் திகைத்தனர்.அப்பொழுது ஆதிவாசிகளின் தலைவன் அவர்களிடத்தில் ஒரு யோசனை சொன்னான். அதாவது முதலில் யாரை அனுப்புவது என்ற முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் என்று......

அப்பொழுது ஒன்றாக கூடிய ஆண்கள் ஒரு முடிவெடுத்தனர். முதலில் பெண்களை எல்லாம் பலி கொடுத்தால் அதற்குள் நம்மை காப்பாற்ற யாரவது வந்து விடுவார்கள் என்று..... அது தான் லேடீஸ் பர்ஸ்ட்......

Thursday, March 11, 2010

சாருவின் பல்டி

நேற்று ஜூனியர் விகடனிலிருந்து........
ஏன் நீ என்ன பெரிய யோக்கியனா என நீங்கள் கேட்கலாம்?
அவன் பண்ண கூடாத தப்பை நான் பண்ணலாம் ஏனா நானொரு வுமனைசர் என்று பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறேன்.

இன்று சாருவின் பதிவிலிருந்து.....
இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது. பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை. எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம். ஆனால் பேச்சில் பேசியது பேசியதுதான். அப்படி விழுந்த வார்த்தை அது.

Wednesday, March 10, 2010

பெண்களை கண்டால்...?

குரங்குகள் ஆண்களைக் கண்டால் ஒன்றும் செய்யாது. ஆனால், பெண்களைக் கண்டால் "உர்"ரென்று கொஞ்சம் முறைத்துப் பார்க்கும்.
காரணம், சீதையைத் தேடி வந்த வம்சாவழி குரங்குகள் என்பதால், "இவள் சீதையாக இருப்பாளோ?" என்று இன்றும் பெண்களைக் கண்டால் உற்றுப் பார்க்கிறது.
ராவணனிடமிருந்து சீதை மீட்கப்பட்ட விவரமும், ராமாயணம் முடிந்து போன விவரமும் இவைகளுக்குத் தெரியாது.
அதனால் இப்போதும் குரங்குகள் சீதையைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

இந்த குரங்குகளின் வேலையை இப்பொழுது சாமியார் போர்வையில் இருக்கும் கயவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்.....

Wednesday, March 3, 2010

சமுதாயம்

பிளாக் பக்கம் போய் ரொம்ப நாளாகிவிட்டது. எதாவது எழுத வேண்டும் என்று நினைப்பு வரும்.வேலை பழுவின் காரணமாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எழுத முடியவில்லை.இப்பொழுதுதான் மென்பொருள் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவருகிறது.இப்பொழுது போய் பிளாக் எழுதுவதில் தீவிரம் காட்டினால் இந்த வருட அப்பரைசல் கோவிந்தாதான்....அதனால் தான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வேலையில் தீவிரம் காட்டி அப்பரைசல் பார்மையும் முடித்து விட்டு எழுத வேண்டும் என்று உட்கார்ந்த போது என்ன எழுதலாம் என்று பலமான சிந்தனை. எழுதியும் ரொம்ப நாளாகிவிட்டது....ஏதாவது சுவாரசியமாக எழுதினால் தான் என்னை நம்பி பின்தொடரும் எனது இருபத்தாறு நண்பர்களுக்கும் புண்ணியம்.(அதில் என் மனைவியும் அடக்கம்)
தமிழ்மணத்தை நித்தியானந்தா தான் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.எங்கு பார்த்தாலும் எந்த இணையதளத்தைப் பார்த்தாலும் அவர் தான்.நான் எழுத ஆரம்பிக்கும் போது அவரைப் பற்றி எழுதலாமா இல்லை அவருடைய திருவுருவ படத்தை தன்னுடைய முதல் பக்கத்திலேயே போட்டிருந்த சாருவைப் பற்றி எழுதுவதா என்று சிந்தனை.தற்பொழுது சாரு தன்னுடைய இணையதளத்தையே முழுவதும் மாற்றி விட்டார்.நானும் காலை முதல் இரவு பன்னிரண்டு மணி வரை நித்யானந்தா பற்றிய கட்டுரை வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் வந்த பாடில்லை.மறு சீரமைப்பு என்று வெளியிட்டுரிகிரார்கள் .வார வாரம் கதவை திற காற்று வரட்டும் என்று நித்யானண்டாவின் போதனைகளை கூவி விற்ற குமுதத்தை பற்றி எழுதுவதா???? இப்பொழுது குமுதத்தின் இணையதளத்தைப் போய் பார்த்தால் பிரபல நடிகைகளுடன் சுவாமி நித்யனண்டாவின் செக்ஸ் லீலைகள் வீடியோ காட்சிகளுடன் என்று இதையும் கூவி விற்கிறார்கள் இப்பொழுது. இதையும் என் மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கித்தான் படிப்பார்கள்.சன் டிவியில் ஒரு படி மேலே போய் அந்த ஆபாச காட்சிகளை ஒரு தணிக்கையும் செய்யாமல் அப்படியே ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒளிபரப்பி தமிழக மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது. கேட்டால் மீடியா என்று பிதற்றி கொள்வது.அரசாங்கம் சினிமாவிற்கு தணிக்கை குழு வைத்திருப்பது போல டிவிகளுக்கும் தணிக்கை குழுவை ஏற்படுத்தவேண்டும்.பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நேரத்தில் இந்த மாதிரி சம்பவங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் பாவம் அந்த மாணவர்களின் நிலை தான் என்ன????வீட்டில் உள்ளவர்களுக்கும் அது என்ன செய்தி என்று பார்க்க ஆசை தான் வரும். பின் எப்படி தான் அந்த பிள்ளைகள் படிப்பார்கள்????ஆனானப்பட்ட சத்யம் மோசடியே ஒரு வாரத்திற்குத்தான் இந்த ஊடகங்களால் தாக்குப்பிடிக்க முடிந்தது.இவை எல்லாம் இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான்....
மக்களுக்கு இந்த விலை வாசி உயர்வை மறக்க செய்யவோ என்னவோ அல்லது பென்னாகரம் இடைதேர்தலை மறக்க செய்யவோ இந்த ஆபாச காட்சிகளை மீண்டும் மீண்டும் சன் குழுமம் (மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மொழிகளிலும்) ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.இந்த பிரச்சனைகளால் இன்று தலைப்பு செய்தியில் வரவேண்டிய ஹைதராபாத் விமான விபத்தை ஏனோ பெட்டி செய்தியாக வெளியிட்டனர்.இந்த செய்தியை என்னையும் கடைசியாக எழுதுமாறு பணித்த சமுதாயத்திற்கு நன்றி...வாழ்க என் சமுதாயம்....வாழ்க என் மக்கள்......