Wednesday, March 3, 2010

சமுதாயம்

பிளாக் பக்கம் போய் ரொம்ப நாளாகிவிட்டது. எதாவது எழுத வேண்டும் என்று நினைப்பு வரும்.வேலை பழுவின் காரணமாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எழுத முடியவில்லை.இப்பொழுதுதான் மென்பொருள் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவருகிறது.இப்பொழுது போய் பிளாக் எழுதுவதில் தீவிரம் காட்டினால் இந்த வருட அப்பரைசல் கோவிந்தாதான்....அதனால் தான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வேலையில் தீவிரம் காட்டி அப்பரைசல் பார்மையும் முடித்து விட்டு எழுத வேண்டும் என்று உட்கார்ந்த போது என்ன எழுதலாம் என்று பலமான சிந்தனை. எழுதியும் ரொம்ப நாளாகிவிட்டது....ஏதாவது சுவாரசியமாக எழுதினால் தான் என்னை நம்பி பின்தொடரும் எனது இருபத்தாறு நண்பர்களுக்கும் புண்ணியம்.(அதில் என் மனைவியும் அடக்கம்)
தமிழ்மணத்தை நித்தியானந்தா தான் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.எங்கு பார்த்தாலும் எந்த இணையதளத்தைப் பார்த்தாலும் அவர் தான்.நான் எழுத ஆரம்பிக்கும் போது அவரைப் பற்றி எழுதலாமா இல்லை அவருடைய திருவுருவ படத்தை தன்னுடைய முதல் பக்கத்திலேயே போட்டிருந்த சாருவைப் பற்றி எழுதுவதா என்று சிந்தனை.தற்பொழுது சாரு தன்னுடைய இணையதளத்தையே முழுவதும் மாற்றி விட்டார்.நானும் காலை முதல் இரவு பன்னிரண்டு மணி வரை நித்யானந்தா பற்றிய கட்டுரை வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் வந்த பாடில்லை.மறு சீரமைப்பு என்று வெளியிட்டுரிகிரார்கள் .வார வாரம் கதவை திற காற்று வரட்டும் என்று நித்யானண்டாவின் போதனைகளை கூவி விற்ற குமுதத்தை பற்றி எழுதுவதா???? இப்பொழுது குமுதத்தின் இணையதளத்தைப் போய் பார்த்தால் பிரபல நடிகைகளுடன் சுவாமி நித்யனண்டாவின் செக்ஸ் லீலைகள் வீடியோ காட்சிகளுடன் என்று இதையும் கூவி விற்கிறார்கள் இப்பொழுது. இதையும் என் மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கித்தான் படிப்பார்கள்.சன் டிவியில் ஒரு படி மேலே போய் அந்த ஆபாச காட்சிகளை ஒரு தணிக்கையும் செய்யாமல் அப்படியே ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒளிபரப்பி தமிழக மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது. கேட்டால் மீடியா என்று பிதற்றி கொள்வது.அரசாங்கம் சினிமாவிற்கு தணிக்கை குழு வைத்திருப்பது போல டிவிகளுக்கும் தணிக்கை குழுவை ஏற்படுத்தவேண்டும்.பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நேரத்தில் இந்த மாதிரி சம்பவங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் பாவம் அந்த மாணவர்களின் நிலை தான் என்ன????வீட்டில் உள்ளவர்களுக்கும் அது என்ன செய்தி என்று பார்க்க ஆசை தான் வரும். பின் எப்படி தான் அந்த பிள்ளைகள் படிப்பார்கள்????ஆனானப்பட்ட சத்யம் மோசடியே ஒரு வாரத்திற்குத்தான் இந்த ஊடகங்களால் தாக்குப்பிடிக்க முடிந்தது.இவை எல்லாம் இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான்....
மக்களுக்கு இந்த விலை வாசி உயர்வை மறக்க செய்யவோ என்னவோ அல்லது பென்னாகரம் இடைதேர்தலை மறக்க செய்யவோ இந்த ஆபாச காட்சிகளை மீண்டும் மீண்டும் சன் குழுமம் (மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மொழிகளிலும்) ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.இந்த பிரச்சனைகளால் இன்று தலைப்பு செய்தியில் வரவேண்டிய ஹைதராபாத் விமான விபத்தை ஏனோ பெட்டி செய்தியாக வெளியிட்டனர்.இந்த செய்தியை என்னையும் கடைசியாக எழுதுமாறு பணித்த சமுதாயத்திற்கு நன்றி...வாழ்க என் சமுதாயம்....வாழ்க என் மக்கள்......

1 comment:

வடுவூர் குமார் said...

:-)) க‌டைசி வ‌ரிக‌ளுக்காக‌..

Post a Comment