நீங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும் வீதியில்தான்குழந்தையொன்று பின்னந்தலையும் தாயும் இல்லாமல் அழுதே இறந்தது.
நீங்கள் நடங்கள்!
நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் போராளி ஒருத்தியைநான்கைந்து பேர்மொழிக் கலப்பற்றுப் புணர்ந்தார்கள்.
நீங்கள் நடங்கள்!
நீங்கள் இப்போதுகால் நனைக்கும் கடற்கரையில்தான்படகில் தப்பி ஒட முயன்றநிறைசூல் பெண் ஒருத்திசுடப்பட்டு இறந்து போனாள்.
நீங்கள் நடங்கள்!
நீங்கள் இப்போது நிற்கும்பதுங்கு குழியில்தான்மேலே செல்லடியில் இறந்தஆறு மாத குழந்தையைத்தூக்க இயலாமல்கையில் துவக்கோடும்தவிப்போடும் நின்றிருந்தான்போராளி ஒருவன்.
நீங்கள் நடங்கள்!
நீங்கள் இப்போது ஒய்வெடுக்கும் இடம்அகதி முகாமாய் இருந்தபோதுநீர் பிடிக்கவும் மகனுக்காகவும்வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர்சுருண்டு விழுந்து இறந்தார்.
நீங்கள் நடங்கள்!
நாளை வேறொரு பகுதிக்கு செல்லலாம்ஆமாம் இப்போது இந்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் செல்லலாம்சுற்றுலா தேசம் இதுஆயினும்சுற்றிக் காட்டவும் சொல்லி காட்டவும்இக்கதைகள் மாத்திரமே உலவுவதற்குநான் எதுவும் செய்வதிற்கில்லை!
No comments:
Post a Comment