- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
- பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்.
- பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும்.
- நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
- பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.
- பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
- பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.
- சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!
- பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.
- பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
- பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.
- பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.
- பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை.
- பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை.
- பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
- நாமெல்லாம் பணத்திற்க்காக என்ன செய்யலாம் என யோசிப்போம் ஆனால் நம்மில் சிலர் பணத்தை என்ன செய்வது என்று யோசிப்பர்.
நான் கற்றதையும் பெற்றதையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டி முற்பட்டதன் விளைவு இந்த எழுத்துக்கள்..............
Thursday, November 12, 2009
பணத்திற்கான மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment