பிரபல எழுத்தாளரும், நாவலாசிரியருமான அனுராதா ரமணன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.அனுராதா ரமணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனை செய்வது வழக்கம்.அதுபோல கடந்த 5ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அந்த மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு பலமுறை செய்யப்பட்டது.இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
எழுத்தாளர் அனுராதா ரமணன், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், `நித்தம் ஒரு நிலா', `முதல் காதல்' உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை எழுதி உள்ளார்.இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.1978ஆம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றார். இப்படி பல பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றவர் அனுராதா ரமணன்.
2 comments:
அவரின் நல் ஆத்மா சாந்தியடையட்டும்.
yes, it is a great loss of tamil wroters world.she was a feminist writer. very very bold writer.I still remember her jeya tv interview.I want to tell her daughters , Be bold like your mother.mothers blessings are always with you.
Post a Comment