Thursday, April 19, 2012

பி. எஃப். கணக்கு இருப்பு: ஆன் லைனில் பார்க்கலாம்

நீண்ட நாட்களாக வருங்கால சேமநல நிதி (பிராவிடெண்ட் ஃபண்ட் - PF ) கணக்குதாரர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடந்திருக்கிறது.அதாவது, பி.எஃப். கணக்குதாரர்கள் அவர்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை இணையதளத்திலேயே (ஆன்லைன்) பார்க்க முடியும்.இதற்கு கீழே உள்ள பி.எஃப். அமைப்பின் இணையதள இணைப்பை கிளிக் செய்யவும்.
http://epfoservices.in/epfo/member_balance/member_balance_office_select.php

அப்போது கம்ஃப்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு பக்கம் தோன்றும்.
அதன் அடியில் Click Here to know the balance என்கிற பகுதியை சொடுக்கினால், இன்னொரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மாநிலம், நகரத்தை தேர்வு செய்ய வேண்டும்அதன் பிறகு உங்கள் நிறுவனத்தின் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பி.எஃப் மற்றும் உங்களின் பெயர் (பி.எஃப்.கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்தால் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத் தகவல் வந்து சேரும்.பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் சுமார் 4 கோடி பேருக்கு இது சந்தோஷமான தகவல்!

No comments:

Post a Comment