மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் தற்செயலாக கீழே விழுந்தது. அதை பார்த்துதான் புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார். இது போலவே பெரும்பாலான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில உங்களுக்காக.....
சர்ச்சின் பிரார்த்தனை கூடத்தில் அமர்ந்திருக்கும் போது அங்கு அலங்கார விளக்குகள் லேசாக ஆடிக்கொண்டிருந்ததை கவனித்தார் கலிலியோ. இதன் மூலம் தான் தனி ஊசல் தத்துவத்தை உருவாக்கினார்.
காது கேளாதவர்களுக்கு ஒரு கருவியை கண்டுபிடிக்க முயன்ற போது தான் கிரகாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்தார். ஒருமுறை தன் உதவியாளர் வாட்சனை கீழ் அறைக்கு அனுப்பி அங்கிருக்கும் கருவியில் ஏதாவது கேட்கிறதா என்று கவனிக்க சொன்னார். மாடியில் உள்ள அறையில் உள்ள கருவியில் கிரகாம் பெல் பேசுவார்.ஆனால் கீழே இருக்கும் வாத்சொனுக்கு ஒன்றுமே கேட்காது.தினமும் இதே வேலை தான். ஒரு நாள் மாடியில் இருந்த பெல் மீது ஒரு ஆசிட் குடுவை பட்டு தீப்பற்றி கொண்டது.பயந்து போன பெல், வாட்சன் கம் ஹியர், ஐ நீட் யு என்று சொன்னார். எதிர்பாராத விதமாக கீழ் இருந்த அறையில் உள்ள கருவியில் அந்த குரல் கேட்டது. மேலே நடந்த விபத்தினை அறியாத வாட்சன் வேலை செய்யுது....வேலை செய்யுது.... என்று கத்திக் கொண்டே மாடிக்கு ஓடினார். இவ்வாறு தான் தொலைபேசி பிறந்தது.
ஜான் வால்கர் என்பவர் ஒரு பார்மாசிஸ்ட். ஒரு நாள் இவர் தரையில் வேதிப் பொருள் ஒன்றை கொட்டிவிட்டார். ஒரு குச்சியை எடுத்து ஒரு முனையால் அதை அகற்றினார்.அப்பொழுது அந்த குச்சி தீப்பற்றி எரிந்தது.இதை வைத்துத்தான் தீக்குச்சியை கண்டுபிடித்தார்.
No comments:
Post a Comment